உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசியல் சாசன தின விழா: கவர்னர் பங்கேற்பு

அரசியல் சாசன தின விழா: கவர்னர் பங்கேற்பு

புதுச்சேரி: பாரதிய அதிவக்தா பரிஷத் புதுச்சேரி கிளை சார்பில், அரசியல் சாசன தின விழா தனியார் ஓட்டலில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, அரசியல் சாசன முகப்புரை குறித்து பேசினார். விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராமசாமி, தென்னிந்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், தேசிய துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ