உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதிதிராவிடர் வீடு கட்டும் திட்டத் தொகை ரூ,5.50 லட்சமாக உயர்வு கவர்னர் தமிழிசை ஒப்புதல்

ஆதிதிராவிடர் வீடு கட்டும் திட்டத் தொகை ரூ,5.50 லட்சமாக உயர்வு கவர்னர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீடு கட்டும் திட்டத் தொகையை 5.50 லட்சமாக உயர்த்தும் திட்டத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் பிரதமர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு 5 லட்சம் ரூபாயை மானியமாக தரப்படுகின்றது.இதில் முதல் தவணை,இரண்டாம் தவணையாக தலா இரண்டு லட்சமும், மூன்றாம் தவணையில் 1 லட்சமும் தரப்படுகின்றது.இதற்கான நிதியை மாநில அரசு 60 சதவீதமும்,மத்திய அரசு 40 சதவீதம் நிதியை பகிர்ந்து கொள்கின்றன.இத்தொகையை 5.50 லட்சமாக உயர்த்தி தரப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.முதல்வரின் அறிவிப்பினை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத் துறையானது கோப்பினை ரெடி செய்து,கவர்னருக்கு அனுப்பியது.இந்த கோப்பிற்கு கவர்னர் தமிழிசை நேற்று ஒப்புதல் அளித்தார்.இதன் மூலம் இனி 5.50 லட்சம் ரூபாய் வீடு கட்டும் திட்டத்திற்கு மானியமாக தரப்பட உள்ளது.பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதுச்சேரியில்- 3196,காரைக்கால்-539,ஏனாம்-81 என மொத்தம் 3816 பயனாளிகள் பலனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ