உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.கவர்னர் கைலாஷ்நாதனுக்கு சமீபத்தில் பல் வலி ஏற்பட்டது. கோரிமேடு, அரசு பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதேபோல அவரது குடும்பத்தினருக்கு உடல் சரியில்லாமல் போனால், அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைக்கு செல்கிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதனால் அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு திடீரென வந்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு 'எக்ஸ்ரே' பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து மாத்திரைகளை வழங்கினர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Neelakanta Pillai
ஜன 25, 2025 07:16

அவரது நல்ல நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால் அதையே முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒரு சாமானியன் அரசு மருத்துவமனைக்குச் செல்வதை நியாயப்படுத்துவது முரண்பாடு. ஏனென்றால் கவர்னருக்கு வழங்கப்படும் சிறப்பு மருத்துவமும் சாமானியனுக்கு வழங்கப்படும் அலட்சிய மருத்துவமும் ஒன்று அல்ல. உதாரணம், சமீபத்தில் சென்னையில் மருத்துவரை தாக்கிய நோயாளியின் நோக்கம். எப்போது சாமானியனுக்கும் கவர்னருக்கான மதிப்பு மரியாதையோடு மருத்துவம் பார்க்கப்படுகிறதோ அப்போதுதான் கவர்னரின் அரசு மருத்துவமனை சிகிச்சையின் நோக்கம் வெற்றி பெறும். எனவே கவர்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் எடுத்துக் கொண்டது செய்தி அல்ல எப்போது கவர்னர் சாமானிய மக்களுக்கும் கவர்னருக்கான மருத்துவத்தை உறுதி செய்கிறாரோ அதுதான் செய்தி.


சமீபத்திய செய்தி