உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சட்டசபை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் இளையவளவன் நோக்கவுரை ஆற்றினார். ஓய்வு பெற்ற ஊழியர் சேகர், அரசு ஊழியர் சம்மேளன ஆலோசகர் ஆனந்தகணபதி, கவுரவத் தலைவர் பிரேமதாசன், அமைப்பு செயலாளர் கலியபெருமாள், நகராட்சி மற்றும் கொம்யூன் ஊழியர்கள் சங்க செயலாளர் வேளாங்கண்ணிதாசன், சகாயராஜ் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பணி நிரந்தரம் மற்றும் 33 மாத 7வது ஊதியக்குழு நிலுவை தொகையை உடனடியாக வழங்ககோரி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்கப் பொருளாளர் கணேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ