மளிகை கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை
புதுச்சேரி: கடலில் குதித்து மளிகை கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், கிழக்கு சண்முகாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சையது இஸ்மாயில், 66; விழுப்புரம்-புதுச்சேரி மெயின்ரேடு மாதா கோவில் பகுதியில் மளிகை கடை வைத்திருந்தார். இவர் கடந்த 10 ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.இதனால் மனமுடைந்த சையது இஸ்மாயில் நேற்று காலை மனைவியிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, புதுச்சேரி கடற்கரை சாலை டூப்ளக்ஸ் சிலை பின்புறம் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசராித்து வருகின்றனர்.