அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம்
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நிகழ்ச்சி நடந்தது. சுதந்திரப்போராட்ட வீரரும், ஆன்மிக வாதியுமான மகான் அரவிந்தரின் 153வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவர் தோற்றுவித்த அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6:00 மணிக்கு ஆசிரமவாசிகளின் கூட்டு தியானம் நடந்தது. அதேபோல், ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் அறை பொது தரிசனத்திற்கு திறந்து விடப்பட்டது. இதில் பக்தர்கள், ஆசிரமவாசிகள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். புதுச்சேரி வைசியாள் வீதியில் அரவிந்தர் முதல் முதலாக புதுச்சேரி வந்து தங்கிய வீட்டில் உள்ள அறையையும் பக்தர்கள் தரிசனர் செய்தனர். அரவிந்தர் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் ஆம்பி தி யேட்டரில் அதிகாலை 4:45 முதல் 6.30 மணி வரை போன்பயர் நிகழ்ச்சிக்கு மூட்டப்பட்ட தீயை சுற்றி அமர்ந்து தியானம் செய்தனர்.