உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியின் பழங்கால கட்டடங்களை ஓவியமாக பிரதி எடுத்த குஜராத் மாணவிகள்

 புதுச்சேரியின் பழங்கால கட்டடங்களை ஓவியமாக பிரதி எடுத்த குஜராத் மாணவிகள்

புதுச்சேரி ஒயிட் டவுனில் உள்ள பாரம்பரிய கட்டட அமைப்பை அறிந்து கொள்ள வெளிமாநில மாணவ, மாணவிகள் புதுச்சேரிக்கு அதிக அளவில் வர துவங்கியுள்ளனர். பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் புதுச்சேரி ஒயிட் டவுனில் கட்டப்பட்டுள்ள பாரம்பரிய கட்டடங்களை பார்வையிட உலகம் முழுவதிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் புதுச்சேரிக்கு வருகின்றனர். 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் இருந்து வரும் இந்த பாரம்பரிய கட்டடங்களின் பிரெஞ்சு கட்டிடக்கலை, கட்டுமான பணிகள் மற்றும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட மரம், சுண்ணாம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் பங்களிப்பு உள்ளிட்டவை அறிந்து கொள்ள தற்போது வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கட்டடவியல் பயிலும் மாணவர்களும் ஏராளமான அளவில் புதுச்சேரிக்கு வர துவங்கியுள்ளனர். அதையொட்டி, குஜராத் மாநிலம் சர்தார் வல்லபாய் பட்டேல் கட்டடவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் 15 பேர் ஒயிட் டவுன் துய்மா வீதியில் உள்ள 'கப்ஸ்' பேராலயம், அப்பகுதியில் கட்டடங்கள் மற்றும் வைசியால் வீதியில் உள்ள பழங்கால வீடுகளை பார்வையிட்டு அந்த கட்டடங்கள் அதன் கட்டுமான பணிகளை ஓவியமாக வரைந்து பிரதி எடுத்து, தங்கள் கல்லுாரிக்கு கொண்டு செல்வதற்காக ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !