உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரபல ரவுடிக்கு குண்டாஸ்

பிரபல ரவுடிக்கு குண்டாஸ்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட, வசந்த் நகர், கெங்கை வீதியைச் சேர்ந்தவர் சிவபெருமான் (எ) சத்தியா, 30. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பெரியக்கடை போலீஸ் வழக்கு ஒன்றில் கைதாகி, தற்போது காலப்பட்டு சிறையில் உள்ளார். இவரால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கருதி, இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பெரியக்கடை போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், சத்தியாவை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள சத்தியாவிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !