உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை வேந்தர் பங்களாவை காலி செய்யாத குர்மீத் சிங்; போராட்டம் நடத்த ஊழியர் சங்கங்கள் முடிவு

துணை வேந்தர் பங்களாவை காலி செய்யாத குர்மீத் சிங்; போராட்டம் நடத்த ஊழியர் சங்கங்கள் முடிவு

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பங்களாவை குர்மீத் சிங் காலி செய்யாததால், பங்களா முன்பு போராட்டம் நடத்த ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக குர்மீத் சிங் கடந்த 2017ம் ஆண்டு நவ., 29ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் கடந்த 2022 நவ., 23 வரை குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய கல்வி அமைச்சகம் இவரது பதவி காலத்தை ஒராண்டு நீட்டித்து உத்தரவிட்டது. நடப்பு கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லுாரிகளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.இந்நிலையில், குர்மீத்சிங் பதவி காலம் கடந்த நவ., 23ம் தேதியுடன் முடிந்தது. குர்மீத்சிங் துணைவேந்தர் பொறுப்புகளை பல்கலைக்கழக இயக்குநர் தரணிக்கரசுவிடம் ஒப்படைத்தார்.துணை வேந்தர் பதவிக்காலம் முடிந்து 2 மாதங்கள் கடந்தும் இதுவரை குர்மீத்சிங் துணைவேந்தர் பங்களாவை காலி செய்யவில்லை. இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர் நலச்சங்கம், எஸ்.சி., - எஸ்.டி. ஊழி யர் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், தற்போதைய துணை வேந்தருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.மேலும், குர்மீத் தங்கியுள்ள துணை வேந்தர் பங்களா முன்பு போராட்டம் நடத்தவும் பல்கலைக் கழகத்தின் பல்வேறு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ