உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி: பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி வேல்ரம்பட்டு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது நைனார்மண்டபம் சேரன் வீதியைச் சேர்ந்த சண்முகம் 58, என்பவது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின் கடையில் இருந்த, ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ