புதுச்சேரி; மகிழ்ச்சி மற்றும் வெற்றி அகாடமி, மகிழ்ச்சி மற்றும் வெற்றி மேம்பாட்டு டிரஸ்ட் சார்பில் 'ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் மற்றும் பெண் முனைவோர் ஷாப்பிங் பெஸ்ட் 2025' நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி செண்பகா கன்வென்ஷன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராக மனடெக் குழும நிறுவனங்களின் தலைவர் மனநாதன் ராஜூபிள்ளை, சிறப்பு விருந்தினர்களாக வரதட்சணை தடுப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர் வித்யா ராம்குமார், பி.என்.ஐ., நிர்வாக இயக்குநர் இளங்கோ செந்தமரை, மணி ஆகியோர் பங்கேற்று, பேசினர். நிகழ்ச்சியில், சிறந்த சமூகத் தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன. புத்தக வெளியீடு, நெட்வொர்க்கிங் அமர்வு மற்றும் எம்பவர்மென்ட் டிரஸ்ட் சமூகத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெண் முனைவோர் ஷாப் பிங் பெஸ்ட் கண்காட்சியில், 25க்கும் மேற்பட்ட பெண் முனைவோர் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர். உயிர்ச்சத்து பொருட்கள், கைவினை நகைகள், நவீன உடைகள், தனிப்பட்ட பரிசுப் பொருட்கள் மற்றும் சுய மேம்பாட்டு புத்தகங்கள் போன்ற பல வகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. முன்னதாக, மகிழ்ச்சி மற்றும் வெற்றி அகாடமி நிறுவனர் பூரணி வரவேற்று, ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் மற்றும் பெண் முனைவோர் பெஸ்ட் ஆகியவை, வெற்றி மற்றும் சமூக மாற்றத்தை ஊக்குவிக்கும் தளங்களாக தொடர்ந்து செயல்படும் என, குறிப்பிட்டார். ஏற்பாடுகளை வி.என்.எம். ஜுவல்லர்ஸ், ஜோதி கண் பராமரிப்பு மையம், வள்ளி விலாஸ், ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, வள்ளி விலாஸ் ரெசிடென்சி மற்றும் சிவா பிரிண்ட்ஸ் ஆகியவை இணைந்து செய்திருந்தன.