உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., மகளிர் அணி தலைவிக்கு பிறந்தநாள்

காங்., மகளிர் அணி தலைவிக்கு பிறந்தநாள்

புதுச்சேரி : புதுச்சேரி மாநில காங்., மகளிர் அணி தலைவி நிஷா தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.விழாவில், மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய மகளிர் அணி தலைவி நிஷாவிற்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து முதலியார்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., காங்., நிர்வாகிகள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி