மேலும் செய்திகள்
பைக்குகள் மோதல் 4 பேர் படுகாயம்
28-May-2025
வில்லியனுார் : வில்லியனுார் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.மடுகரை அடுத்த சொர்ணாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 48. இவர், நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் உறவினரின் திருமண விழாவிற்கு தனது மாருதி ஈகோ காரில் (பி ஒய் 05 விசி 8299) மனைவி சண்முகபிரியா, 45; தாய் தையல்நாயகி, 70; சகோதரர் குருமூர்த்தி, 53, அவரது மனைவி சாந்தி, 51, மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், 78, ஆகியோருடன் சென்றுகொண்டிருந்தார்.காலை 6:45 மணியளவில் சங்கராபரணி ஆற்று பாலத்தில் ஆரியப்பாளையம் வளைவு பகுதியில் சென்றபோது காரின் வலது பக்க முன் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே தென்னல் எம்.என்.குப்பத்தை சேர்ந்த சுப்புரமணி மகன் குமார், 40, ஓட்டி வந்த டாடா அல்ராக்ஸ் (பி.ஒய். 05 விடி 5056) கார் மீது மோதியது.இந்த விபத்தில் இரண்டு கார்களில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-May-2025