சுகாதார விழிப்புணர்வு முகாம்
பாகூர்: உலக இதய தினத்தை முன்னிட்டு, பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக மருந்தியல் பள்ளி புதுச்சேரி வளாகம் சார்பில், மணமேடு கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில், பங்கேற்ற பொது மக்களுக்கு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டு, இதய ஆரோக்கியம், வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதயத் தாக்கத்தின் போது முதல் உதவி மற்றும் இதய நுரையீரல் புத்துயிர்ப்பு குறித்து, முதுகலை மாணவர்களால் காட்சி நாடகம்நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவ அதிகாரி ராஜேஸ்வரன், செவிலியர் சுகன்யா, கிராம சமூகப்பணியாளர்கள் ரங்கராஜன், காரிகாலன் ஆகியோர் பங்கேற்றனர். முகாமினை, மருந்தியல் பள்ளியின் மருந்தியல் நடைமுறைத் துறை பேராசியர் ராமம் ஸ்ரீபதா, ஒருங்கிணைப்பு செயலாளர் காயத்ரி,உறுப்பினர் வான்மதி மற்றும் முதுநிலை மாணவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். முன்னதாக, முகாமை நடத்திட வழிகாட்டிய, பல்கலைக் கழக வேந்தர் ராஜகோபாலன், துணைவேந்தர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ், பதிவாளர் சீனிவாசன், சுகாதார, மருத்துவமனை மற்றும் வெளிப்பணி சேவைகள் இயக்குநர் நிர்மல்குமார், மருந்தியல் பள்ளி முதல்வர் சண்முகநாதன், சுகாதார துறை துணை இயக்குநர் ஷமீமுனிசா பேகம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.