திருவள்ளூர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி
புதுச்சேரி; திருவள்ளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி காமராஜ் கோபு, பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு உயர்கல்வியில் உள்ள வழிகள், மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட தகவல்களை விளக்கினார் . நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வி தொடர்பான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.