உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆவணக் காப்பகத்தில் இந்தி பயிலரங்கம்

 ஆவணக் காப்பகத்தில் இந்தி பயிலரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் ஒரு நாள் இந்தி பயிலரங்கம் நேற்று நடந்தது. விழாவில் ஆவணக் காப்பகத்தின் உதவி இயக்குனர் முருகேசன் வரவேற்றார். பயிலரங்கத்தை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற அதிகாரி சுரேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பயிலரங்க காப்பக உதவி இயக்குனர் முருகேசன் பேசுகையில், 'இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாக இருப்பதோடு மட்டுமின்றி மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும், இந்தியாவின் பாரம்பரிய அடையாள மொழியாகவும் இருக்கிறது' என்றார். பயிலரங்கில் புதுச்சேரி ஆவண மையத்தின் நிரந்த அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ