மூலக்குளம் விவேகானந்தா பள்ளியில் 10ம் தேதி ஹிந்து பெரியோர்கள் சந்திப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வரும் 10ம் தேதி மூலக்குளம் விவேகானந்தா பள்ளியில், ஹிந்து பெரியோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் கடந்த 61 ஆண்டுகளாக தேசிய மற்றும் தெய்வீகப் பணியாற்றி வருகிறது. இன்று ஏற்பட்டுள்ள பாரத நாட்டின் வெற்றிச் சூழலில், ஹிந்து பெரியோர்கள் சந்தித்து மேலும் வலு சேர்க்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனையொட்டி, புதுச்சேரியில் உள்ள ஹிந்துகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி ஒருங்கிணைக்க, புதுச்சேரி விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வரும் 10ம் தேதி, மூலக்குளம் விவேகானந்தா பள்ளியில் பகல் 12:௦௦ மணி முதல் 2:௦௦ மணிவரை நடைபெறும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலக இணை அமைப்பு பொதுச் செயலாளர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில், மாநிலத்தை சேர்ந்த ஹிந்து பெரியோர்கள் கலந்து கொள்ளுமாறு, புதுச்சேரி மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.