மேலும் செய்திகள்
இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை
07-Apr-2025
அரியாங்குப்பம் : வாய்க்காலில் விழுந்து இறந்தவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் கந்தன், 42, இவர் அதிகமாக மது குடித்ததால், கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் நல்லவாடு சாலை சாராயக்கடை அருகே உள்ள வாய்க்காலில், மது போதையில் இறந்து கிடந்தார். தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Apr-2025