உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு மனித வள மேம்பாட்டு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு மனித வள மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளி, சமுதாய நலப் பணித் திட்டம் சார்பில், மாணவர்களுக்கான மனித வள மேம்பாடு, ஒழுக்க மேலாண்மை மற்றும் போதைப் பொருள் தடுப்பு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியை பத்மாவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் காண்டீபன் வரவேற்றார். அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பத், முகாமை தொடங்கி வைத்து, மது போதைப் பொருட்களின் வகைகள், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், ஆன்லைன் விளையாட்டுகள், சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். புதுச்சேரி அரசின் சிறுவர் நலக் குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி கல்வி, அறிவு, தனி மனித ஒழுக்கம், உயர் எண்ணங்கள், பேச்சாற்றல், தலைமைப் பண்பு, போட்டித் தேர்வுகளை எழுதும் முறை, நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் மற்றும் அவர்கள் செய்த தியாகங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை ஆரோக்கிய மேரி ஸ்டெல்லா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி