மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவருக்கு வலை
புதுச்சேரி : இரண்டாவது திருமணம் செய்ததை தட்டி கேட்ட மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.முதலியார்பேட்டை சேர்ந்தவர் சைமன் கீர்த்தி. வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 30. இவர்களுக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லை என, மனைவியிடம் சைமன் கீர்த்தி தகராறு செய்து வந்தார்.சூரியா கணவரிடம் கோபித்து கொண்டு, தனது இரு மகள்களை அழைத்து கொண்டு, அவர் கடந்த 2023ம் ஆண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இதனிடையே, சைமன் கீர்த்தி, இரண்டாவது, திருமணம் செய்து கொண்ட தகவல் சூரியாவிற்கு தெரியவந்தது. அதையடுத்து, கணவர் வீட்டு வந்து இது குறித்து கேட்டார். ஆத்திரமடைந்த அவர், சூரியாவை கத்தியால் குத்த முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சைமன் கீர்த்தியை தேடி வருகின்றனர்.