உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவிக்கு வரதட்சணை கொடுமை கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

மனைவிக்கு வரதட்சணை கொடுமை கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

புதுச்சேரி: மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். மாகே, மஞ்சகல் பகுதியைச் சேர்ந்தவர் பிசா பைசல், 26, என்பவருக்கம், தமிழ்நாடு, திருப்போருரைச் சேர்ந்த முகமது ஷாஸ் என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 27 சவரன் நகைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பிசா பைசலை மிரட்டி, தாக்கினார். இதுகுறித்து பிசா பைசல் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, முகமது ஷாஸ், பெற்றோர் ஷம் சுதீன், சவுஜத் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை