நானே தாளம் போடுறேன் முதல்வர் ரங்கசாமி விரக்தி
புதுச்சேரி: சட்டசபை கேள்வி நேரத்தின்போது இலவச மனை பட்டா விவகாரத்தை எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ரங்கசாமியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.லட்மிகாந்தன் (என்.ஆர்.காங்): இலவச எல்.ஜி.ஆர்., மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களின் நிலை என்ன.முதல்வர் ரங்கசாமி: மாநிலம் முழுதுமே எல்.ஜி.ஆர்., பட்டா கேட்கின்றனர். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்ததில் சாலை, கோவில் நிலம், பள்ளிக்கூடம், நீர்நிலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளன. அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான கோரிக்கையை பரிசீலிக்க இயலாது. நானே எனது தொகுதியில் ஒரு பட்டா கொடுக்க முடியாமல் தாளம் போடுகிறேன். சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் இந்த இடங்களில் பட்டா வழங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளன. எனவே நீதிமன்ற அவமதிப்பிற்கு வழிவகுக்கும். அதற்குள் நாம் செல்ல வேண்டாம். எப்படி வழங்க முடியும் என்பதை கலந்து ஆலோசித்து வழங்கப்படும்' என்றார்.