உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இலாகா கொடுத்தால் 2நாளில் ராஜினாமா

 இலாகா கொடுத்தால் 2நாளில் ராஜினாமா

புதுச்சேரி: இலாகா கொடுத்தால் 2 நாளில் ராஜினாமா செய்து விடுவேன் என, அமைச்சர் ஜான்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது வீட்டில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், பா.ஜ., வை சேர்ந்த அமைச்சர் ஜான்குமார் மலரஞ்சி செலுத்தினார். அப்போது அங்கு வந்த காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஜான்குமாரிடம் எப்போது தான் இலாகா கொடுப்பாங்களாம், என்றார். அதற்கு, ஜான்குமார் ஆட்சி முடிவதற்குள் கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார்கள். இலாகா கொடுத்தால் அடுத்த 2 நாளில் ராஜினாமா செய்துவிடுவேன். அதனால் கொடுக்காமல் இருக்கிறார்கள். உடன் நாராயணசாமி, நீங்க என்ன சொன்னீங்க பா.ஜ., விற்கு போனால் அந்த மில்லை திறக்கலாம். இந்த மில்லை திறக்கலாம். இவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் என, சொன்னது ஜான்குமார் தான... அந்த வீடியோ என்னிடம் இருக்கிறது. அதைத்தான் வரும் தேர்தலில் போட்டு காட்டப்போறேன் என்றார். அதற்கு, ஜான்குமார் சிரித்தபடியே போட்டியே உங்களுக்கும், எங்களுக்கும் தான், என்றபடி அங்கிருந்து புறப்பட்டார். எதிரெதிர் கட்சிகளை சேர்ந்த நாராயணசாமியும், ஜான்குமாரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டு பேசிய சம்பவம் இரு கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை