உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கடற்கரை சாலையில் ஸ்டார்ட் அப் கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி கடற்கரை சாலையில் ஸ்டார்ட் அப் கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் இரு நாள் 'ஸ்டார்ட் அப் 'கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரியின் தொடக்க நிலை தொழில் வணிக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், வணிக தொழில் துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் இரண்டு நாள் 'புதுச்சேரி ஸ்டார்ட் அப் எக்ஸ்போ'விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் துவக்க விழா நேற்று நடந்தது முதல்வர் ரங்கசாமி ஸ்டார்ட் அப் கண்காட்சியை துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், அரசு செயலர் ஆஷிஷ் மாதோராவ் மோரே, தொழிற்துறை இயக்குனர் ருத்ரகவுடு, அடல் இன்குபேஷன் சென்டர் நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி, முதன்மை செயல் அதிகாரி விஷ்ணுவரதன், நிர்வாக அதிகாரி ராஜகுமார், மேலாளர் காமேஷ் கலந்து கொண்டனர்.இன்று 4ம் தேதியுடன் நிறைவு பெறும் இந்த ஸ்டார்ட் அப் கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட வணிக மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் 200க்கும் மேற்பட்ட தொடக்க நிலை வணிக நிறுவனர்கள் பங்கேற்றுள்ளனர். கண்காட்சியை காண பொது மக்களுக்கு அனுமதி இலவசம். காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை