உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் புதுச்சேரியில் இன்று முதல் அமல்

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் புதுச்சேரியில் இன்று முதல் அமல்

புதுச்சேரி : புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.புதுச்சேரியில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கட்டணம் உயர்த்தப்படவில்லை. கொரோனா தொற்று பரவல் பிறகு தனியார் பஸ்கள் தன்னிச்சையாக பஸ் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வந்தது.பஸ் கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை எழுந்தது. அதைத் தொடர்ந்து, 6 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பஸ்களின் கட்டணம் உயர்த்தி கடந்த 17ம் தேதிஅறிவிப்பு வெளியானது.சாதாரண டவுன் பஸ்களுக்கு முதல் ஸ்டேஜ் கட்டணம் ரூ. 5ல் இருந்து 7 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதிகபட்சமாக 13ல் இருந்து 17 ரூபாயாகவும், எக்ஸ்பிரஸ் பஸ்களில் புதுச்சேரி எல்லைக்குள் ஒரு கி.மீ.,க்கு 0.75 பைசாவாகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்த உயர்த்தப்பட்ட புதிய பஸ் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.டவுன் பஸ்கள்:புதுச்சேரி நகர பகுதியில் இயங்கும் டவுன் பஸ்களில் குறைந்தபட்சமாக இருந்த 5 ரூபாய் கட்டணம் 7 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் ஸ்டேஜ் கட்டணம் ரூ. 7. அதன் பிறகு ஒவ்வொரு 2 கி.மீ., துாரத்திற்கும் ரூ. 1 வீதம் அதிகபட்சம் ரூ. 17 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மதகடிப்பட்டு பாதை:புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி செல்லும் பஸ்கள் வில்லியனுார் வரை ரூ. 10, கண்டமங்கலம், ரூ. 16, திருபுவனை ரூ. 19, மதகடிப்பட்டுக்கு ரூ. 21 என உயர்ந்துள்ளது.மடுகரை பாதை:அரியாங்குப்பம், தவளக்குப்பம் வரை ரூ. 10, அபிேஷகப்பாக்கம் ரூ. 12, கல்மண்டபம் ரூ. 23, மடுகரை ரூ. 27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து ஊசுட்டேரி, வழுதாவூர் வழியாக திருக்கனுார் செல்ல ரூ. 21 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி - கடலுாருக்கு ஏற்கனவே இருந்த ரூ. 20 கட்டணம் தற்போது ரூ. 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி -விழுப்புரம் கட்டணம் ரூ. 35, புதுச்சேரி- திண்டிவனத்திற்கு ரூ. 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பி.ஆர்.டி.சி., பஸ் கட்டண விபரம்:புதுச்சேரி - சென்னை (இ.சி.ஆர்.) - ரூ. 160.புதுச்சேரி - சென்னை (பைபாஸ்) - ரூ. 130.புதுச்சேரி - காரைக்கால் ரூ. 130, புதுச்சேரி - வேளாங்கண்ணி ரூ. 170, நாகப்பட்டினம் ரூ. 160, காரைக்கால் - சென்னைக்கு (இ.சி.ஆர்.) ரூ. 300, பைபாஸ் சாலை ரூ. 275 ஆக மாற்றப்பட்டுள்ளது.காரைக்கால் - கோயம்புத்துார் ரூ. 360, புதுச்சேரி - திருப்பதி ரூ. 275, புதுச்சேரி - பெங்களூர் ரூ. 440, புதுச்சேரி - மாகிக்கு ரூ. 740, புதுச்சேரி - கம்பம் ரூ. 370, புதுச்சேரி - நாகர்கோவில் ரூ. 620, புதுச்சேரி - திருநெல்வேலி ரூ. 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை