உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விடுதலை நாள் விழா கொண்டாட்டம்

விடுதலை நாள் விழா கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விடுதலை நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் விடுதலை நாள் விழாவையொட்டி, முதல்வர் ரங்கசாமி, தேசியக் கொடி ஏற்றினார். சட்டசபை பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாண சுந்தரம், ரமேஷ், ராமலிங்கம், பாஸ்கர், செந்தில்குமார், சம்பத், ஜான்குமார், அசோக்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கலெக்டர் அலுவலகம்

புதுச்சேரி, கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் குலோத்துங்கனும், நீதிமன்றத்தில் போக்சோ கோர்ட் நீதிபதி சுமதி, பாரதிதாசன் மகளிர் கல்லுாரியின் முதல்வர் வீரமோகன் தேசியக்கொடி ஏற்றினார். விழாவில் வக்கீல் சங்க செயலாளர் நாராயணகுமார், பொருளா ளர் ராஜ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

என்.ஆர்.காங்., அலுவலகம்

என்.ஆர்.காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி, தேசியக்கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மலர் துாவி மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சி முதன்மை செயலாளர் ஜெயபால், பொருளாளர் வேல்முருகன், செயலாளர் ரமேஷ், துணைத் தலைவர் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.

காங்., அலுவலகம்

புதுச்சேரி காங்., அலுவலகத்தில் வைத்திலிங்கம் எம்.பி., தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்வில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பாலன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை