உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலை.,யை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பல்கலை.,யை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: பு துச்சேரி பல்கலை நிர்வாகத்தை கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி பல்கலை மற்றும் காரைக்கால் கிளை கல்லுாரி பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் மீது பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், 6 மாணவிகள் உட்பட 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பேராசிரியர்கள் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், மாணவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், இண்டி கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பல்கலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, தி.மு.க., அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, சம்பத், செந்தில்குமார், வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், தமிழக செயலாளர் வீரபாண்டியன், மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், வி.சி.க., முதன்மை செயலர் தேவபொழிலன், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், மா.கம்யூ., எம்.எல்., புருஷோத்தம்மன், மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் சுதா சுந்தர்ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இண்டி கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, பல்கலை முன் கமாண்டோ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !