உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இண்டியா கூட்டணி ஹிந்துக்களுக்கு எதிரானது: புதுச்சேரி கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு

இண்டியா கூட்டணி ஹிந்துக்களுக்கு எதிரானது: புதுச்சேரி கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு

புதுச்சேரி: ''அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்த, 'இண்டியா' கூட்டணி தான், ஹிந்துக்களுக்கு எதிரானது,'' என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை குற்றம் சாட்டினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:சேலம் தி.மு.க., மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால், ஹிந்துக்களுக்கு பா.ஜ., எதிரி என்று தி.மு.க., சொன்னால், அக்கட்சியின் தலைவர் ஏன் தீபாவளிக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை.அப்படியானால், ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்வர். தி.மு.க., தான் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று பட்டவர்த்தனமாக தெரிகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும், 500 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, ராமர் கோவில் கட்டப்படுகிறது. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில், இத்தனை ஆண்டுகளாக வழக்கு நடத்தி, அது கோவில் இருந்த இடம் தான், மசூதி இருந்த இடம் கிடையாதுஎன தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.அங்கு கோவிலுக்கு மேல் மசூதி கட்டப்பட்டது என்பதால், அங்கு மசூதி அகற்றப்பட்டு, கோவில் கட்டப்படுகிறது. அதே சமயத்தில், கோவிலுக்கு பக்கத்தில் மசூதியும் கட்டப்படுகிறது.சமத்துவ சமதர்ம மத ஒற்றுமைக்கு அயோத்தி உதாரணமாக இருக்கிறது. பிரதமர் மோடி மூன்று நாட்கள் தமிழகத்தில் தங்கி, நீரை எடுத்து சென்று, அதன் மூலம், ராமருக்கு கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது என்று சொன்னால், தமிழருக்கு பெருமை.சரித்திர ரீதியாக, ராமாயணத்தோடு, தமிழகம் எந்தளவிற்கு ஒத்துப்போகிறது என்பது மட்டுமல்லாமல், நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.அயோத்தி விழாவை, இண்டியா கூட்டணி முழுமையாக புறக்கணித்திருக்கின்றனர் என்றால், அவர்கள் தான் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள். இதை அரசியலாக பார்க்கவில்லை என்றால், அவர்கள் ஏன் புறக்கணிக்கின்றனர்.500 ஆண்டுகளாக, தனக்கு சொந்தமான இடத்தை, சொந்தமில்லாமல் ராமனை வைத்திருந்த அவலம் மாறி, இன்று சொந்த இடத்திற்கு ராமன் திரும்புகிறார். அவர், தமிழகத்திலும் வந்து தன்னை நிலை நிறுத்த போகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ