மேலும் செய்திகள்
மகள் மாயம்; தந்தை புகார்
27-May-2025
புதுச்சேரி : தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் கலையரசி, 37. அந்த பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி, அந்த ஓட்டல் அறையில் தங்கியிருந்த சுற்றுலா பயணி தனது நகை, பணம் காணாமல் போனதாக தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, சந்தேகத்தின் பேரில், ஓட்டலில் வேலை செய்த கலையரசி உட்பட 5 பெண்களிடம் விசாரித்தனர். தகவலறிந்த, கலையரசியின் கணவர் அர்சுனன், 53, மனமுடைந்து நேற்று முன்தினம் இறந்தார்.நகை கிடைத்துவிட்டதாக சுற்றுலா பயணி கூறியதின் பேரில் கலையரசி குற்றமற்றவர் என தெரியவந்தது. அவரது கணவர் இறப்புக்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா உள்ளிட்ட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி நேற்று மாலை தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் இண்டியா கூட்டணி சார்பில், ஊர்வலமாக சென்று, ஆர்ப்பாட்டம் மற்றும் காவல் நிலையம் முற்றுக்கை போராட்டம் நடந்தது. வி.சி., முதன்மை செயலாளர் பொழிலன், அமுதவன், கம்யூ., ராஜாங்கம், பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். தகவலறிந்த எஸ்.பி., பக்தவச்சலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
27-May-2025