மேலும் செய்திகள்
தி.மு.க., ஆலோசனை கூட்டம்
29-Aug-2024
புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி இந்திய கம்யூ., செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி, மாநில குழு உறுப்பினர் கீதநாதன், தொகுதி செயலாளர் சுகதேவ் துணைச் செயலாளர் சிவராமகிருஷ்ணன், சக்திவேல், கண்ணன் முத்துவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கிகின்றனர். குண்டும், குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும். கனரக வாகனங்கள் தவளைக்குப்பம் கரிக்க லாம்பாக்கம், உறுவை யாறு, வில்லியனுார் வழியாக புதுச்சேரிக்கு செல்லும் வகையில், மாற்ற வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக, பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், போக்குவரத்து எஸ்.பி., ஆகியோரை சந்தித்து மனு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
29-Aug-2024