இந்திய கம்யூ., கூட்டம்
பாகூர்: இந்திய கம்யூ., பாகூர் தொகுதி குழு கூட்டம், கருணாஜோதி இல்லத்தில் நடந்தது. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தொகுதி குழு பொறுப்பாளர் நாரா கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா, மாநில குழு உறுப்பினர் மூர்த்தி, ஏம்பலம் தொகுதி செயலாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், கட்சியின் நுாற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக பாகூர், ஏம்பலம் தொகுதி குழு கூட்டப்பட வேண்டும். டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை முடிக்க வேண்டும். பாகூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கம் அல்லது பாகூர் பஸ் நிலையத்திற்கு தியாகி அன்னுசாமி பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.