மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷனர் விலகக்கோரி ஆர்ப்பாட்டம்
02-Oct-2026
புதுச்சேரி: தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி இந்திய கம்யூ., சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி இந்திய கம்யூ., சார்பில் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சட்டசபை எதிரில் இன்று (அக்.,27) நடந்தது. இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், தேசிய செயற்குழு உறுப்பினர் தினேஷ்பொன்னையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொருளாளர் சுப்பையா, அந்தோணி, எழிலன், ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
02-Oct-2026