உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

 இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் தொடர்ந்து நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டித்து இ.கம்யூ., சார்பில், ஆர்ப்பாட்டம் உழவர்சந்தை அருகில் நடந்தது. தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தொகுதி பொருளாளர் ராமன், ராமு, சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம், தேசியகுழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில பொருளாளர் சுப்பையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் லாஸ்பேட்டை பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க தவறிய லாஸ்பேட்டை போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்