உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம் அறிவிப்பு

விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரி: முதல்வர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார். அவர், கூறியதாவது: மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க தவறிய என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்தும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மா.கம்யூ., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சிகள் இணைந்து போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளன. முதல் கட்டமாக வரும் 31ம் தேதி புதுச்சேரி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் எண்ணெய், கடலைப்பருப்பு, சமையல் காஸ் மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது. எனவே முதல்வர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சந்தையில் செயற்கையாக உருவாக்கப்படும் அரிசி பதுக்கல்களை அரசு தடுக்க வேண்டும். இலவச அரிசி மற்றும் அந்தியோதிய அன்ன யோஜனா திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து அத்தியாவசிய பொருட்களையும் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். தீபாவளிக்கு அரசு அறிவித்துள்ள ரூ.750 தொகுப்பு நிதி யானை பசிக்கு சோளப்பபொறி போன்றது. மக்களின் வாழ்வாதரத்தை காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !