உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் பிரச்னையை சரி செய்ய இந்திய கம்யூ., கோரிக்கை

குடிநீர் பிரச்னையை சரி செய்ய இந்திய கம்யூ., கோரிக்கை

புதுச்சேரி : காமராஜர் நகர் தொகுதியில் குடிநீர், மின் அழுத்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என இந்திய கம்யூ., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திய கம்யூ., காமராஜர் நகர் தொகுதிக்குழு கூட்டம் சித்தன் குடி இந்திரஜித் படிப்பகத்தில் நடந்தது. தொகுதி துணை செயலாளர் தயாளன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் துரைசெல்வம் கிளை மாநாடுகள், தொகுதி மாநாடு நடத்துவது குறித்து பேசினார்.கூட்டத்தில் சாமிப்பிள்ளைத்தோட்டம் வெள்ளவாரி வாய்காலையொட்டி தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். காமராஜர் நகர் தொகுதியில் குடிநீர், மின் அழுத்த பிரச்னையை சரி செய்ய வேண்டும். தெருவில் குப்பைகளை தினமும் அள்ள வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் நாய், மாடுகளை பிடிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஞானசேகரன், சங்கர், மோகன்தாஸ், சரவணன், சந்திரகுமார், மாதவராமன், கோவிந்தராஜ், சரவணன், அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை