மேலும் செய்திகள்
சட்டசபை சபாநாயகர்கள் மாநாடு இன்று துவக்கம்
24-Aug-2025
சிவம் நினைவு நாள் அனுசரிப்பு
01-Sep-2025
புதுச்சேரி : இந்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு பங்கேற்றனர். கர்நாடக மாநில பெங்களூருவில் 11வது காமன்வெல்த் பார்லிமெண்ட் அமைப்பின் இந்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டசபை செயலாளர் தயாளன் பங்கேற்றனர். மாநாட்டில் சபாநாயகர் செல்வம் பேசுகையில், 'விவாதங்களும், கலந்துரையாடல்களும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் ஜனநாயக கொள்கைகளின் உருவகமாக செயல்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் சட்டசபைகள், எம்.எல்.ஏ.,க்கள் மக்களின் குரல்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு சமமான தளமாக விளங்குகின்றன. இந்த டிஜிட்டல் யுகத்தில் சட்டசபையில் நவீன தொழில்நுட்பங்களை இணைத்து சட்டசபை பதிவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என, குறிப்பிட்டார்.
24-Aug-2025
01-Sep-2025