இந்திய பள்ளி விளையாட்டுப் போட்டி லாஸ்பேட்டையில் 19ல் தகுதி தேர்வு
புதுச்சேரி: மாநில கராத்தே சங்கத்தின் பயிற்சியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கவுண்டம்பாளையம் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் வளவன், மாநில கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினர். மாநில பொருளாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். சர்வதேச நடுவர் ஜோதிமணி, துணைத் தலைவர்கள் மூர்த்தி, மதிஒளி, இணைச்செயலாளர்கள் சுப்ரமணியன், வெங்கடாஜலபதி, நிர்வாகிகள் அழகப்பன், குமரன் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிகளுக்கு வீரர்களைதேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போட்டியின்போது நடுவர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. மத்திய பிரதேசம் இந்துார், மகாராஷ்டிரா பூனேவில் நடக்க உள்ள இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி தேர்வு வரும் 19ம் தேதி லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளது. இதில், அனைத்து பள்ளி மாணவர்களும் அவர்களது பள்ளி மூலமாக ஒப்புதல் பெற்று கலந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.