மேலும் செய்திகள்
சிவசுப்ரமணியர் கோவிலில் கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம்
29-Oct-2024
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வரும் 2ம் தேதி துவங்குகிறது.நெட்டப்பாக்கம் கொம்யூன் கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத குமரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வரும் 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது.இதையொட்டி, தினமும் இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா நடக்கிறது. வரும் 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு குமரேஸ்வர சுவாமி, அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 7ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், 8ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, 10ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
29-Oct-2024