உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தல்

சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தல்

புதுச்சேரி: தீபாவளி பரிசுத் தொகை கிடைக்கப் பெறாத சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர்கள் வரும் 30ம் தேதிக்குள் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை மற்றும் புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை உறுப்பினராகப் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டிற்கான தீபாவளி பரிசுத் தொகையாக ரூ. 2,000 அவர்களின் வங்கி கணக்கில் இன்று (நவ.,6) செலுத்தப்பட்டுள்ளது. இந்த தீபாவளி பரிசுத் தொகை கிடைக்கப் பெறாத உறுப்பினர்கள் வரும் 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நேரில் அணுகி விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக உறுப்பினர் அடையாள அட்டை, 2026-ம் ஆண்டிற்கான சந்தா கட்டிய ரசீது, பயன்பாட்டில் உள்ள வங்கி கணக்கு புத்தகம் ஐ.எப்.எஸ்.சி., எண்ணுடன் மற்றும் ஆதார் அட்டை நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரிய அலுவலகத்திலும், காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் மதகடி காமராஜர் வாளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்திலும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறும் உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டிற்கான தீபாவளி பரிசுத் தொகை செலுத்தப்படாது. இத்தகவலை தொழிலாளர் அதிகாரி பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை