நுண்ணறிவு திறன் பயிற்சி கருத்தரங்கு
புதுச்சேரி; புதுச்சேரி, பெரியார் நகரில் இயங்கி வரும் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நியூரோ வித்யாசம் உள்ள குழந்தைகளின் கற்றல் சவால்கள் மற்றும் நுண்ணறிவு திறன் பயிற்சி கருத்தரங்கு நடந்தது.பள்ளியின் தாளாளர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கினார். இதில், ஆயுர்வேதா சித்த மருத்துவர் ஜாய் இம்மானுவேல், அரசு மனநல மருத்துவர் அரவிந்தன், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மனநல மருத்துவர் ஷர்மி, ஆகியோர் கலந்து கொண்டு, நியூரோ மாறுபாடு கொண்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் கற்றல் சவால்கள், அவர்களின் திறனை மேம்படுத்தும் முறைகள் மற்றும் இணைப்பு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர்.இதில், போப்ஜான் பால் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவர்கள், விவேகானந்தா கல்லுாரி இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மனநல மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எதிர்கொண்ட கஷ்டங்கள், இப்பள்ளியில் சேர்ந்த பின், அவர்களின் வாழ்வியல் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்தனர்.