மேலும் செய்திகள்
நிலத்தகராறில் ஒருவர் தாக்குதல் 10 பேருக்கு வலை
03-Sep-2025
வில்லியனுார்: உத்திரவாகினிபேட் அருகே நடந்த கொலை வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். உறுவையாறுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அங்காளன் மகன் சவுந்தர், 31; ஒதியம்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணமானவர். நேற்று முன்தினம் இரவு, வி.தட்டாஞ்சாவடி சாலையில் பைக்கில் சென்றபோது, சிறிது துாரத்திலேயே பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் சவுந்தரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று மாலை சந்தேக நபர்கள் 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
03-Sep-2025