உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பள்ளிகளுக்கு இடையே வாலிபால் போட்டி

 பள்ளிகளுக்கு இடையே வாலிபால் போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை சார்பில், உப்பளம், இந்திரா உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 22, 23ம் தேதிகளில், 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான, வாலிபால் போட்டி நடந்தது. இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 8 வட்டங்களில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.இதில், வட்டம் -2ஐ சேர்ந்த பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். வட்டம் -4 இரண்டாம் இடத்தையும், காரைக்கால் வடக்கு பகுதியை சேர்ந்த வட்டம் -5 மூன்றாம் இடத்தையும்,காரைக்கால் தெற்கு பகுதியை சேர்ந்த வட்டம் - 6 மாணவிகள் நான்காம் இடத்தையும் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை