தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கம் துவக்கம்
புதுச்சேரி: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பல்கலையின், ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, துருக்கி, சிர்ட் பல்கலை சார்பில் 'வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான பயன்பாட்டு கணித அறிவியல்' தலைப்பிலான இரு நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று துவங்கியது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலை வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆராய்ச்சி ஒருங்கிணைப் பாளர் முபீன் தாஜூதீன் வரவேற்றார். தாய்லாந்து, மாய்ஜோ பல்கலையின் கணிதத்துறை தலைவர் கிரீன்கராய் ராஜ்சகித், இத்தாலி, பொலிடெக்னிகோ டி டோரினோ, மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி சாண்டோ பானர்ஜி, பல்கலைக கூடுதல் பதிவாளர் இளங்கோவன் வாழ்த்தி பேசினர்.வேலுார், திருவள்ளுவர் பல்கலைக்கழக கணிதத்துறை பேராசிரியர் சையத் அலி 'குவாலிடேடிவ் அனலிசிஸ் ஆப் டயனமிக்கல் சிஸ்டம்ஸ்' தலைப்பிலும், சிக்கிம், மணிப்பால் பல்கலைக்கழக கணிதத்துறை உதவிப் பேராசிரியர் அசித்சாஹா 'நான் லீனியர் டயமிக்கல் சிஸ்டெம்ஸ் இன் பிளாஸ்மா வேவ்' தலைப்பிலும் மாணவர்களிடம் உரையாடினர் .கருத்தரங்கில் துருக்கி, மலேசியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள முன்னணி கல்வி நிறுவங்களின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களால் 300 மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.கருத்தரங்கில் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிதி அலுவலர் ராஜசேகர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியின் டீன் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சர்வதேச மாநாட்டின் செயலாளர் அகத்தியன் நன்றி கூறினார். இன்றைய கருத்தரங்கில் பல்வேறு அமர்வுகள் நடக்கிறது.