உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரவு 12:00 மணி வரை உணவகம் செயல்பட அனுமதி ரவுடிகளை கண்காணிக்கும் ஆப்பரேஷன் வேட்டை திட்டம் அமைச்சர் நமச்சிவாயம்  பேட்டி

இரவு 12:00 மணி வரை உணவகம் செயல்பட அனுமதி ரவுடிகளை கண்காணிக்கும் ஆப்பரேஷன் வேட்டை திட்டம் அமைச்சர் நமச்சிவாயம்  பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் நள்ளிரவு 12 மணி வரை இரவு நேர சாலையோர உணவகங்கள் திறந்திருக்கவும், ஒரு ரவுடிக்கு ஒரு கான்ஸ்டபிள் நியமித்து கண்காணிக்கும் ஆப்ரேஷன் வேட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.அவர் கூறியதாவது;புதுச்சேரியில் நடந்த 3 கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பரேஷன் வேட்டை என்ற புதிய திட்டம் மூலம், ஒவ்வொரு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட முதன்மையான 10 குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க, ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நியமிக்க உள்ளோம். வியாபாரிகள் கோரிக்கை ஏற்று இரவு நேர சாலையோர உணவகங்கள் நள்ளிரவு 12:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.3 பேர் கொலை வழக்கில் கைதான நபர் வெளியூரில் இருந்தார். சம்பவ நடந்த அன்று தான் தனது காதலியுடன் காதலர் தினம் கொண்டாட புதுச்சேரி வந்துள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்தது.கைது செய்யப்பட்டவர்களுக்கு அசம்பாவிதம் நடந்து விட கூடாது என்பதற்காக, பத்திரிக்கை களுக்கு தகவல் தெரிவிக்காமல் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.ரவுடிகள் மீது பதிவு செய்யப்படும் குண்டாஸ் வழக்குகள் ராத்தாகுவதை விட, சில கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் கூட தள்ளுபடி ஆகிறது.குற்ற வழக்கில் கைதாகும் சிறார்கள் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

டிராபிக் விதிகளையாரும் மதிப்பதில்லை

புதுச்சேரியில் எத்தனை பேர் டிராபிக் விதிகளை மதித்து செல்கிறார்கள்,. யாரும் டிராபிக் விதிகளை மதிப்பது கிடையாது. சிக்னல்களில் நிற்பது கிடையாது. முண்டியடித்து கொண்டு செல்கின்றனர். எத்தனை காவலர் நியமித்தாலும் அதை மீறி செல்லும் சூழல் உள்ளது. புதுச்சேரியில் வாகனங்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஆனால் சாலைகள் குறுகலாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை எடுத்தால், வாழ்வாதாரம் பாதிக்கிறது என பிரச்னை செய்கின்றனர். முகூர்த்த நாள், விடுமுறை நாட்களில் டிராபிக் தவிர்க்க முடியாத பிரச்னையாக மாறி உள்ளது. அதை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ