உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மனை பட்டா வழங்கல்

இலவச மனை பட்டா வழங்கல்

அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் இருளர் இன மக்களுக்கு இலவச மனை பட்டாவை சபாநாயகர் செல்வம் வழங்கினார். மணவெளி தொகுதி டி.என்., பாளையம் பகுதியில் இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, அரசு இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் விடுபட்டவர்களுக்கு அரசு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மூலம் இலவச மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவகத்தில் நேற்று நடந்தது. சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு மனை பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பழங்குடியினர் நல சங்க தலைவர் ராம்குமார், விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன், தொகுதி தலைவர் ரஞ்சித்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை