மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
19-Jul-2025
புதுச்சேரி: திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி ஒய்ட் டவுன் சார்பில் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி ஒய்ட் டவுன் தலைவர் செந்தில்குமார் மாணவர்களுக்கு அடையாள அட்டை, பெல்ட் மற்றும் துண்டுகள் வழங்கினார். செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ராஜி, ஆசிரியர்கள் சக்கரபாணி, லட்சுமி, ஏஞ்சலின் தேவப்பிரியா, ஹேமாவதி, இசை ஆசிரியர் தணிகாசலம், கணினி பயிற்றுநர் கவுசல்யா, அலுவலக ஊழியர்கள் வேல்முருகன், ஷர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை கனகவல்லி நன்றி கூறினார். ஆசிரியர் நிர்மல் தொகுத்து வழங்கினார்.
19-Jul-2025