உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். புதுச்சேரி சமூக நலத்துறை மூலம் மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருக்கனுாரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கினார். பா.ஜ., பிரமுகர் முத்தழகன், சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, முதல்வர் நிவாரண நிதி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை