மீனவர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கல்
புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த மீனவ பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில், காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கணபதிசெட்டிக்குளம், பெரிய காலாப்பட்டு, சின்னக் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ சமுதாய முதியோர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா காலாப்பட்டில் நடந்தது.விழாவில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நான்கு கிராமங்களை சேர்ந்த 80 மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில் நலத்துறை அதிகாரிகள், மீனவ கிராம பஞ்சாயத்தார், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.