பதவி உயர்வு ஆணை வழங்கல்
புதுச்சேரி: கால்நடை பராமரிப்பு மற்றும் நலத் துறையில் பணியாற்றி வரும் கால்நடை மருத்துவர்கள் அனந்தராமன், மரியா, சுரேஷ் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அப்போது, அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துறை செயலர் முகமது யாசின், துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குநர் குமரன் உடனிருந்தனர்.