உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டு

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டு

காரைக்கால்: காரைக்காலை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டின் அருகில், திருநள்ளாறு அத்திப்படுகை பகுதி ராஜ்குமார், 21, கூலி வேலை செய்து வந்தார். அப்போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை கூறி, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.பின், திருமணம் செய்து கொண்டார். குடும்ப தகராறில் சிறுமியை ராஜ்குமார் தாக்கி உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி 2023 ஆக., 10ம் தேதி திருநள்ளார் போலீசில் புகார் செய்தார். போலீசார், ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். ராஜ்குமார் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு சென்றபோது, அங்குள்ள கழிப்பறைக்கு செல்வதாக கூறி தப்பி சென்றார். போலீசார் அவரை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.ராஜ்குமார் மீதான போக்சோ வழக்கு, காரைக்கால் கோர்ட்டில் நீதிபதி முருகானந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், சிறுமியை பலாத்காரம் செய்த ராஜ்குமாருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 7,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை